Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 102/116 திரு வேங&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 102/116 திரு வேங&

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 102/116 திரு வேங்கடம் தொழ , தீய விபூதியில் மருவேம் !


    திருப்பதி - 96/108 வடநாடு - 01/12 : திரு வேங்கடம்


    தானே சரணமும் ஆய் , தானே பலமும் ஆய் ,
    தானே குறை முடிக்கும் தன்மையனாய் - தேன் ஏய்
    திருவேங்கடம் தொழுதேம் ; தீய விபூதிக்குள்
    மருவேம் ; கடந்தனெம் இவ்வாழ்வு


    பதவுரை :


    தானே சரணமும் ஆய் தானே அடையும் வழியான உபாயம் ஆகி ,
    தானே பலமும் ஆய் தானே அடைய வேண்டிய பலன் ஆன உபேயமாகவும் ஆகி ,
    தானே குறை முடிக்கும் தன்மையனாய் தானே அடியார்களின் மனக்குறையை போக்கும்
    தேன் ஏய் திருவேங்கடம் தொழுதேம் தேன் நிறைந்த திருவேங்கடத்தைத் தொழுதோம்
    தீய விபூதிக்குள் மருவேம் இந்தக் கொடிய பூமியில் இனி இருக்கமாட்டோம்
    கடந்தனெம் இவ்வாழ்வு இந்த வாழ்க்கையைக் கடந்து விட்டோம்





    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 23-11-13, 13:04.
Working...
X