4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 101/116 திருக்கடிகை மாயவனை ஒரு கடிகை நினை !
திருப்பதி - 95/108. தொண்டை - 22/22 : திருக் கடிகை (சோளிங்க புரம் )
சீர் அருளால் நம்மைத் திருத்தி , நாம் முன் அறியாக்-
கூர் அறிவும் தந்து , அடிமை கொண்டதற்கே - நேரே
ஒரு கடிகையும் மனமே ! உள்ளுகிலாய் முத்தி
தரு கடிகை மாயவனைத் தான்
பதவுரை :
மனமே என் மனமே !
சீர் அருளால் நம்மைத் திருத்தி சிறந்த திரு அருளால் நம்மை நல வழிப் படுத்தி ,
நாம் முன் அறியா நாம் இதற்கு முன்னே அறிந்திராத
கூர் அறிவும் தந்து நுட்பமான அறிவையும் நமக்குக் கொடுத்து ,
அடிமை கொண்டதற்கே நம்மை ஆட்கொண்டதற்காக
முத்தி தரு தன்னை அடைந்தார்க்கு நற்கதியைத் தரும்
கடிகை மாயவனைத் தான் திருக் கடிகையில் இருக்கும் நரசிம்ஹனை
ஒரு கடிகையும் உள்ளுகிலாய் ஒரு நாழிகையாவது நினைக்க மாட்டாயா ?
***************************************************************
தொண்டை நாட்டுத் திருப்பதிகள் முற்றிற்று

V.Sridhar