Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 100/116 திருவல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 100/116 திருவல்

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 100/116 திருவல்லிக்கேணியான் கரு வல்லிக்கு மருந்து !

    திருப்பதி - 94/108. தொண்டை - 21/22 : திரு அல்லிக் கேணி

    திரிந்து உழலும் சிந்தை தனைச் செவ்வே நிறுத்தி ,
    புரிந்து புகன்மின் ; புகன்றால் - மருந்து ஆம்
    கரு வல்லிக்கு ; ஏணி ஆம் , மாக்கதிக்கு கண்ணன்
    திருவல்லிக்கேணியான் சீர்

    பதவுரை :

    திரிந்து உழலும் சிந்தை தனை சென்று அலைகின்ற உங்கள் மனதை
    செவ்வே நிறுத்தி அலையாமல் தடுத்து நேராக நிறுத்தி ,
    திருவல்லிக்கேணியான் திருவல்லிக்கேணியில் இருக்கும்
    கண்ணன் சீர் வேங்கட கிருஷ்ணனுடைய புகழை
    புரிந்து புகன்மின் விரும்பிக் கூறுங்கள்
    புகன்றால் அவ்வாறு கூறினால்
    மருந்து ஆம் கரு வல்லிக்கு கருப்பம் ஆகிய கொடியை அழிக்கும் மருந்து ஆகும்
    ஏணி ஆம் மாக்கதிக்கு முக்திக்கு செல்லும் ஏணியும் ஆகும்

    V.Sridhar
    Last edited by sridharv1946; 22-11-13, 20:58.
Working...
X