4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 097/116 போர் மலை வாணன் நீர் மலை எந்தை காட்டினான் !
திருப்பதி - 91/108. தொண்டை - 18/22 : திரு நீர் மலை
இரங்கும் உயிர் அனைத்தும் இன்னருளால் காப்பான்
அரங்கன் ஒருவனுமே ஆதல் - கரங்களால்
போர் மலைவான் வந்த புகழ் வாணன் காட்டினான்
நீர் மலை வாழ் எந்தை எதிர் நின்று
பதவுரை :
இரங்கும் உயிர் அனைத்தும் வருத்துகின்ற எல்லா உயிர்களையும்
இன்னருளால் காப்பான் தனது இனிய கருணையினால் பாது காப்பவன்
அரங்கன் ஒருவனுமே ஆதல் திரு அரங்க நாதன் ஒருவனே ஆவான் என்பதை
கரங்களால் போர் மலைவான் தனது ஆயிரம் கைகளினாலும் போர் செய்யும்படி
வந்த புகழ் வாணன் வந்த புகழ் பெற்ற வாணாசுரன்
நீர் மலை வாழ் எந்தை திருநீர்மலையில் இருக்கும் எம்பெருமானுடைய
எதிர் நின்று காட்டினான் எதிரில் நின்று நமக்குக் காண்பித்தான்
V.Sridhar