4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 096/116 எவ்வுள் அத்தனே ! வெவ்வுளத்தினைப் பொறு !
திருப்பதி - 90/108. தொண்டை - 17/22 : திரு எவ்வுளூர்
நீர்மை கெட வைதாரும் , நின்னோடு எதிர்ந்தோரும் ,
சீர்மை பெற நின் அடிக் கீழ்ச் செர்க்கையினால் - நேர்மை இலா
வெவ் உளத்தனேன் செய் மிகையைப் பொறுத்தருளி
எவ்வுள் அத்தனே ! - நீ இரங்கு
பதவுரை :
எவ்வுள் அத்தனே திரு எவ்வுளூரில் இருக்கும் தலைவன் ஆன வீர ராகவனே
நீர்மை கெட வைதாரும் உனது தன்மை அழியும்படி உன்னை நிந்தித்தவர்களும் ,
நின்னோடு எதிர்ந்தோரும் உன்னோடு போர் செய்தவர்களும்
சீர்மை பெற சிறப்பு அடையும்படி
நின் அடிக் கீழ்ச் சேர்க்கையினால் உன் திருவடிகளில் சேர்தலால்
நேர்மை இலா நல்ல குணம் இல்லாத
வெவ் உளத்தனேன் கொடிய சிந்தனை உடைய நான்
செய் மிகையைப் செய்த குற்றங்களை
பொறுத்தருளி உன் திருவருளினால் பொறுத்துக் கொண்டு
நீ இரங்கு திரு உள்ளம் இரங்கி ஆட்கொள்வாயாக
V.Sridhar