Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 095/116 நின்றவூ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 095/116 நின்றவூ

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 095/116 நின்றவூர் நித்திலத்தை நினைமின் !

    திருப்பதி - 89/108. தொண்டை - 16/22 :

    சீர் அறிந்து , தோழிமீர் ! சென்று கொணர்ந்து எனக்குப்
    போர முலை முகட்டில் பூட்டுமினோ - நேர் அவுணர்
    பொன்ற ஊர் புட்கழுத்தில் பொன்னை , மாணிக்கத்தை
    நின்றவூர் நித்திலத்தை , நீர்

    பதவுரை :

    தோழிமீர் நீர் எனது தோழிகளே ! நீங்கள்
    நேர் அவுணர் பொன்ற எதிர்த்துப் போரிட்ட அசுரர்கள் அழியும்படி
    ஊர் புட்கழுத்தில் பொன்னை ஏறி செல்லும் கருடன் கழுத்தில் பொன் போல இருப்பவனும்
    மாணிக்கத்தை இயற்கையில் கரிய மாணிக்கத்தைப் போன்றவனுமான
    நின்றவூர் நித்திலத்தை திருநின்றவூரில் இருக்கும் முத்து போன்றவனுடைய
    சீர் அறிந்து சிறப்பை உணர்ந்து
    சென்று கொணர்ந்து கொண்டு வந்து
    எனக்குப் போர எனக்கு மன நிறைவு தரும்படி
    முலை முகட்டில் எனது தனங்களின் உச்சியின் மீது
    பூட்டுமினோ அணிவியுங்கள்

    V.Sridhar
Working...
X