4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 093/116 பரமேச்சுர விண்ணகரான் அடியார்க்கே ஆட்படுத்தான் !
திருப்பதி - 87/108. தொண்டை - 14/22 : திருப் பரமேச்சுர விண்ணகரம்
பதத் தமிழால் தன்னையே பாடுவித்து , என்னைத் தன்
பதத்து அடியார்க்கே ஆட்படுத்தான் - இதத்த
பரமேச்சுர விண்ணகரான் , பல ஆன்
வர மேச்சு உரல் அணைந்த மால்
பதவுரை :
பல ஆன் வர மேச்சு பல பசுக்கள் திரண்டு வர , அவைகளை மேய்த்து ,
உரல்அணைந்த மால் யசோதையால் உரலில் கட்டப்பட்ட திருமால் ஆகிய
இதத்த அடியார்க்கு நன்மை செய்யும்
பரமேச்சுர விண்ணகரான் பரமேச்சுர விண்ணகரில் இருக்கும் பரமபத நாதன்
பதத் தமிழால் பக்குவமான தமிழ்ப் பாடல்களால
தன்னையே பாடுவித்து தன்னை மட்டுமே பாட வைத்து
என்னை அடியேனை
தன் பதத்து அடியார்க்கே தன்னுடைய திருவடிகளில் தொண்டு செய்பவர்க்கே
ஆட்படுத்தான் அடிமை ஆக்கினான்
V.Sridhar