4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 092/116 பவள வண்ணா ! நின் பொற் பாதம் அறிந்தேன் !
திருப்பதி - 86/108. தொண்டை - 13/22 : திருப் பவள வண்ணன்
கண்டு அறிந்தும் , கேட்டு அறிந்தும் , தொட்டு அறிந்தும் காதலால்
உண்டு அறிந்தும் , மோந்து அறிந்தும் , உய்யேனே - பண்டைத்-
தவள வண்ணா ! கார் வண்ணா ! சாம வண்ணா ! கச்சிப்-
பவள வண்ணா ! நின் பொற் பாதம்
பதவுரை :
பண்டைத் தவள வண்ணா ! கிருத யுகத்தில் பால் போல வெண்ணிறம் ஆனவனே !
கார் வண்ணா ! மேகத்தின் தன்மை உடையவனே !
சாம வண்ணா ! இயற்கையில் கரு நிறம் ஆனவனே !
கச்சிப் பவள வண்ணா ! காஞ்சியில் இருக்கும் பவள வண்ணனே !
நின் பொற் பாதம் உன் அழகிய திருவடிகளை
காதலால் பக்தியோடு
கண்டு அறிந்தும் எனது கண்களால் தரிசித்து உணர்ந்தும் ,
கேட்டு அறிந்தும் காதுகளால் கேட்டு உணர்ந்தும் ,
தொட்டு அறிந்தும் மெய்யினால் தொட்டு உணர்ந்தும் ,
உண்டு அறிந்தும் வாயினால புசித்து உணர்ந்தும் ,
மோந்து அறிந்தும் மூக்கினால் முகர்ந்து உணர்ந்தும்
உய்யேனே நான் ஈடேற வில்லை
V.Sridhar