Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 091/116 கள்வர் வ&a

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 091/116 கள்வர் வ&a

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 091/116 கள்வர் வணங்கும் கள்வனூர் மால் கள்வன் அல்ல !

    திருப்பதி - 85/108. தொண்டை - 12/22 : திருக் கள்வனூர்

    பண்டே உன் தொண்டு ஆம் பழ உயிரை என்னது என்று
    கொண்டேனைக் கள்வன் என்று கூறாதே - மண் தலத்தோர்
    புள் வாய் பிளந்த புயலே ! உன்னைக் "கச்சிக்
    கள்வா" என்று ஓதுவது என் கண்டு ?

    பதவுரை :

    புள் வாய் பிளந்த கொக்கு எனும் பறவையாய் வந்த அசுரனைக் கொன்ற
    புயலே !புயல் போன்றவனே !
    மண் தலத்தோர் பூமியில் உள்ளவர்கள்
    பண்டே உன் தொண்டு ஆம் நெடுங்காலமாக உனக்கு அடிமை பட்டிருந்த
    பழ உயிரை அநாதியான என் ஆத்மாவை
    என்னது என்று கொண்டேனை என்னுடையது என்று கருதி இருந்த என்னை
    கள்வன் என்று கூறாதே திருடன் என்று கூறாமல்
    உன்னை எல்லோருக்கும் தலைவனான உன்னை
    "கச்சிக் கள்வா" என்று கச்சிக் கள்வனே என்று
    ஓதுவது என் கண்டு ? சொல்வதற்கு என்ன காரணம் ?


    V.Sridhar
Working...
X