4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 090/116 வானம் உண்ட கார்வானத்தாய் ! பாலால் பசி ஆறுவாயா ?
திருப்பதி - 84/108. தொண்டை - 11/22 : திருக் கார் வானம்
"தாலேலோ" என்று ஆய்ச்சி தாலாட்டி , தன முலைப் பா-
லாலே எவ்வாறு பசி ஆற்றினள் முன் - மாலே பூங்-
கார்வானத்து உள்ளாய் ! கடலோடும் வெற்போடும் பார் வானம் ,
உண்டாய் நீ , பண்டு
பதவுரை :
மாலே ! பூங்கார்வானத்து உள்ளாய் ! அழகிய கார்வானத்து இருப்பவனே ! திருமாலே !
நீ பண்டு நீ முற்காலத்தில் பிரளய காலத்தில்
கடலோடும் வெற்போடும் கடலோடும் , மலைகளோடும்
பார் வானம் உண்டாய் பூமியையும் வானத்தையும் உண்டாய் !
ஆய்ச்சி இடைச்சியான யசோதைப் பிராட்டி
"தாலேலோ" என்று தாலாட்டி தாலேலோ என்று பாடித் தாலாட்டி
தன் முலைப் பாலாலே தனது தனத்தில் உள்ள பாலால்
எவ்வாறு பசி ஆற்றினள் கிருஷ்ணனான உனது பெரும் பசியை எப்படி தணித்தாளோ ?
--
V.Sridhar