Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 087/116 ஊரகத்தா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 087/116 ஊரகத்தா

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 087/116 ஊரகத்தாய் ! வாசத்தாள் என் தலை மேல் வைத்தாய் !

    திருப்பதி - 81/108. தொண்டை - 8/22 : திரு ஊரகம்

    நேசத்தால் அன்று உலகை , நீர் வார்க்க , வைத்து அளந்த
    வாசத்தாள் என் தலை மேல் வைத்திலையேல் - நாசத்தால்
    பாரகத்துள் அன்றி , யான் பாழ் நரகில் வீழ்ந்து என் கொல் ?
    ஊரகத்துள் நின்றாய் !

    பதவுரை :

    ஊரகத்துள் நின்றாய் திரு ஊரகத்தில் இருப்பவனே !

    அன்று நீர் வார்க்க முன்பு வாமனான உன் கையில் மஹா பலி நீரை வார்த்த போது
    நேசத்தால் உலகை வைத்து அளந்த கருணையால் உலகங்களையும்
    வாசத்தாள் மணமுள்ள உன் திருவடிகளை
    என் தலை மேல் வைத்திலையேல் என் தலையின் மீது வைக்காமல் போனால்
    யான் பாரகத்துள் நான் பூமியில் வாழ்ந்தால் என்ன ?
    அன்றி நாசத்தால் அல்லது அழிந்து போய்
    பாழ் நரகில் வீழ்ந்து என் கொல் ?கொடிய நரகத்தில் விழுந்தால் என்ன ?
    உரை உரைப்பாய்


    V.Sridhar
Working...
X