4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 086/116 நின் அடிப்பூ கலாத்திங்கள் துண்டத்தின் மீது இருந்தது !
திருப்பதி - 80/108. தொண்டை - 7/22 : திரு நிலாத் திங்கள் துண்டம்
மீண்டும் தெளியார்கள் மேதினியோர் நின் அடிப்பூப்-
பாண்டரங்கம் ஆடிப் படர் சடை மேல் - தீண்டி
கலாத்திங்கள் துண்டத்தின் மீது இருப்பக் கண்டும் ;
நிலாத் திங்கள் துண்டத்தானே
பதவுரை :
நிலாத் திங்கள் துண்டத்தானே நிலாத் திங்கள் துண்டம் எனுமிடத்தில் இருப்பவனே !
நின் அடிப்பூ அருச்சுனன் கிருஷ்ணன் கால் அடியில் சாற்றிய புஷ்பங்கள்
பாண்டரங்கம் ஆடி பாண்டரங்கம் எனும் கூத்து ஆடிய சிவனுடைய
படர் சடை மேல் தீண்டி பரந்த சடையின் மீது பொருந்தி
கலாத்திங்கள் துண்டத்தின் மீதுஇளம் பிறைச் சந்திரனுக்கு மேல்
இருப்பக் கண்டும் இருப்பதைப் ப் பார்த்திருந்தாலும்
மேதினியோர் இந்த பூமியில் உள்ளவர்கள்
மீண்டும் தெளியார்கள் மறுபடியும் அறிய மாட்டார்கள்