4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 085/116 நீரகத்தாய் ! வேதியர்க்கு அழி உலகைக் காட்டினாய் !
திருப்பதி - 79/108. தொண்டை - 6/22 : திரு நீரகம்
ஆலத்து இலை சேர்ந்து அழி உலகை , உட்புகுந்த
காலத்தில் , எவ்வகை நீ காட்டினாய் - ஞாலத்துள்
நீரகத்தாய் ! நின் அடியேன் நெஞ்சகத்தாய் ! நீள் மறையின்
வேரகத்தாய் ! வேதியர்க்கு மீண்டு
பதவுரை :
நீரகத்தாய் ! நீரகத்தில் இருப்பவனே !
நின் அடியேன் நெஞ்சகத்தாய் ! அடியேன் நெஞ்சில் இருப்பவனே !
நீள் மறையின் வேரகத்தாய் ! நீண்ட வேதங்களின் மூலப் பொருளே !
வேதியர்க்கு பிரளயத்தைக் காண விரும்பிய வேதம் வல்லமார்க்கண்டேயனுக்கு
உட்புகுந்த காலத்தில் உன் வயிற்றில் அவர் புகுந்த போது
ஆலத்து இலை சேர்ந்து ஆலிலையில் பள்ளி கொண்ட நீ
அழி உலகை பிரளயத்தில் அழிந்து போன உலகத்தை
எவ்வகை நீ மீண்டு காட்டினாய் எவ்வாறு நீ மறுபடியும் காட்டினாய் ?
--
V.Sridhar