4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 082/116 வண்கா துவரை வைத்த தண் காவினனை வணங்கு !
திருப்பதி - 76/108. தொண்டை - 3/22 : திருத் தண்கா
ஆட்பட்டேன் ; ஐம்பொறியால் ஆசைப்பட்டேன் ; அறிவும்
கோட்பாட்டு நாணும் குறைபட்டேன் - சேண்பட்ட
வண் காவை வண் துவரை வைத்த விளக்கொளிக்கு ,
தண் காவைச் சேர்ந்தான் தனக்கு
பதவுரை :
சேண்பட்ட வண் காவை தேவ உலகத்தில் உள்ள வளமுள்ள பாரிஜாத மரத்தை
வண் துவரை வைத்த செழிப்பான துவாரகையில் கொண்டு வந்து நாட்டிய
தண் காவைச் சேர்ந்தான் தனக்கு திருத் தண் காவில் இருக்கும்
விளக்கொளிக்கு தீபப் பிரகாசர் எனப்படும் விளக்கொளிப் பெருமாளுக்கு
ஆட்பட்டேன் அடிமை பட்டேன்
ஐம்பொறியால் ஆசைப்பட்டேன் எனது ஐம்பொறிகளாலும் அவர் மீது ஆசை கொண்டேன்
அறிவும் கோட்பட்டு எனது அறிவும் அவரால் கவரப் பட்டது
நாணும் குறைபட்டேன் எனது நாணமும் குறைந்து விட்டது
--
V.Sridhar