Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 079/116 பூங்கோவ&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 079/116 பூங்கோவ&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 079/116 பூங்கோவல் ஆயன் பொருள் அனைத்தும் !

    திருப்பதி - 73/108. நடு - 2/2 : திருக் கோவலூர்

    தாமரையான் ஆதியாய்த் தாவரங்கள் ஈறு ஆன
    சேம உயிரும் , செகம் அனைத்தும் - பூ மடந்தைக்கு
    ஆம் கோ , அலாயுதன் பின்னா அவதரித்த
    பூங்கோவல் ஆயன் பொருள்

    பதவுரை :

    தாமரையான் ஆதியாய் தாமரையில் இருக்கும் பிரமன் முதலாக
    தாவரங்கள் ஈறு ஆன தாவரப் பொருள்கள் இறுதியாக உள்ள
    சேம உயிரும் உலகில் உள்ள எல்லா உயிர்களும் ,
    செகம் அனைத்தும் எல்லா உலகங்களும்
    பூ மடந்தைக்கு ஆம் கோ தாமரையில் இருக்கும் திருமகளுக்குத் தலைவனும் ,
    அலாயுதன் பின்னா கலப்பையை ஆயுதமாக உடைய பலராமனுக்கு தம்பியாய்
    அவதரித்த அவதரித்த
    பூங்கோவல் ஆயன் திருக்கோவலூரில் இருக்கும் ஆயனாரது
    பொருள் படைப்புப் பொருள்களே ஆகும்



    **********************************************
    நடு நாட்டுத் திருப்பதி முற்றிற்று

    **********************************************
    --
    V.Sridhar
Working...
X