4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 076/116 திருக் கடித்தானத்தனைச் சென்று தொழுவேன் !
திருப்பதி - 70/108. மலை நாடு -12/13 : திருக் கடித்தானம்
காண விரும்பும் என் கண் ; கையும் தொழ விரும்பும் ;
பூண விரும்பும் என் தன் புன் தலை தான் - வாணன்
திருக்கு அடித்தான் , நத்தான் , திகிரியான் , தண்டான் ,
திருக் கடித்தானத்தனைச் சென்று
பதவுரை :
வாணன் திருக்கு அடித்தான் வாணாசுரனுடைய பகையை ஒழித்தவனும் ,
நத்தான் பாஞ்சஜன்யம் எனும் சங்கத்தை உடையவனும் ,
திகிரியான் சுதர்சனம் எனும் சக்கரத்தை உடையவனும் ,
தண்டான் கௌமோதகி எனும் கதையை உடையவனுமான
திருக் கடித்தானத்தனைச் சென்று திருக்கடித்தானத்தில் இருப்பவனைச் சென்று
காண விரும்பும் என் கண் காண்பதற்கு என் கண்கள் ஆசைப்படும்
கையும் தொழ விரும்பும் தொழுவதற்கு என் கைகள் விரும்பும்
என் தன் புன் தலை தான் இழிவான என் தலையும்
பூண விரும்பும் அவன் திருவடிகளை சூடிக்கொள்ள விரும்பும்
V.Sridhar