Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 075/116 திரு விற&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 075/116 திரு விற&

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 075/116 திரு விற்றுவக்கோடு சேர்ந்தால் , பிறவி ஓடும் !


    திருப்பதி - 69/108. மலை நாடு -11/13 : திரு விற்றுவக்கோடு


    வாய்த்த கருமம் இனி மற்று இல்லை ; நெஞ்சமே !
    தோய்த்த தயிர் , வெண்ணெய் . தொட்டு உண்ட - கூத்தன் noo
    திரு விற்றுவக்கோடு சேர்ந்தால் , பிறவிக்-
    கருவின் துவக்கு ஓடும் காண்


    பதவுரை :


    நெஞ்சமே ! எனது மனமே !
    தோய்த்த தயிர் தோய்த்தபடியே உள்ள தயிரையும் ,
    வெண்ணெய் தொட்டு வெண்ணெயையும் களவாடி,
    உண்ட கூத்தன் புசித்த திருவிளையாடலை உடைய திருமாலின்
    திரு விற்றுவக்கோடு சேர்ந்தால் திரு விற்றுவக்கோட்டுக்குச் சென்று சேர்ந்தால்
    பிறவிக் கருவின் மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு
    துவக்கு ஓடும் காரணமான கருவின் சம்பந்தம் நீங்கும் ;
    வாய்த்த கருமம் நாம் செய்ய வேண்டிய கருமம்
    இனி மற்று இல்லை காண் இனிமேல் வேறு ஒன்றும் இல்லை




    V.Sridhar
Working...
X