Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 074/116 கேசவனே ! வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 074/116 கேசவனே ! வ

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 074/116 கேசவனே ! வாட்டாற்றுக் கண் துயில் கொள்வாய் !

    திருப்பதி - 68/108. மலை நாடு -10/13 : திரு வாட்டாறு

    மாலை , முடி நீத்து , மலர்ப் பொன் அடி நோவப்-
    பாலைவனம் புகுந்தாய் பண்டு என்று - சாலவும் நான்
    கேட்டால் துயிலேன் காண் கேசவனே ! பாம்பணை மேல்
    வாட்டாற்றுக் கண் துயில் கொள்வாய் !

    பதவுரை :

    கேசவனே கேசவனே !
    பண்டு முற்காலத்தில்
    மாலை , முடி நீத்து "அரசர்க்கு உரிய மாலையையும் , முடியையும் துறந்து
    மலர்ப் பொன் அடி நோவ தாமரை மலர் போன்ற உன் திருவடி வருந்தும்படி
    பாலைவனம் புகுந்தாய் கொடுமையான காட்டில் நடந்தாய்"
    என்று நான் கேட்டால் என்று நான் கேட்டவுடன்
    சாலவும் துயிலேன் காண் நான் நன்கு கண் உறங்கவில்லை
    வாட்டாற்று ஆனால் நீயோ திரு வாட்டாற்றில்
    பாம்பணை மேல் பாம்பு படுக்கையில்
    கண் துயில் கொள்வாய் கவலை இல்லாமல் கண் உறங்குகின்றாய் !






    --
    V.Sridhar
Working...
X