4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 072/116 திரு வல்லவாழ் உறையும் தே அரு அல்ல உரு அல்ல !
திருப்பதி - 66/108. மலை நாடு - 08/13 : திரு வல்லவாழ்
உகந்தார்க்கு எஞ்ஞான்றும் உளன் ஆய் , உகவாது
இகந்தார்க்கு எஞ்ஞான்றும் இலன் ஆய் - திகழ்ந்திட்டு ,
அரு அல்ல , வாழ உருவம் அல்ல , என நின்றான்
திரு வல்லவாழ் உறையும் தே
பதவுரை :
திரு வல்லவாழ் உறையும் தே திருவல்லவாழில் இருக்கும் திருமால்
உகந்தார்க்கு தன்னை விரும்பிய பக்தர்களுக்கு
எஞ்ஞான்றும் உளன் ஆய் எப்பொழுதும் உள்ளவன் ஆகவும்
உகவாது இகந்தார்க்கு தன்னை விரும்பாமல் இல்லை எனும் நாத்திகர்களுக்கு
எஞ்ஞான்றும் இலன் ஆய் எப்பொழுதும் இல்லாதவன் ஆகவும்
திகழ்ந்திட்டு விளங்கி
அரு அல்ல வாழ உருவம் அல்ல "அருவமும் அல்ல உருவமும் அல்ல"
என நின்றான் எனும்படி இருக்கிறான்
V.Sridhar