4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 071/116 திரு நாவாய் தேவனை என் நா வாய் வாழ்த்தும் !
திருப்பதி - 65/108. மலை நாடு - 07/13 : திரு நாவாய்
பறந்து திரிதரினும் பாவியேன் உள்ளம்
மறந்தும் பிறிது அறிய மாட்டா ; சிறந்த
திரு நாவாய் வாழ்கின்ற தேவனை அல்லால் , என்
ஒரு நாவாய் வாழ்த்தாது உகந்து
பதவுரை :
பாவியேன் உள்ளம் தீவினை உடைய என் மனம்
பறந்து திரிதரினும் விரைந்து அலையும் குணம் உடையது ஆயினும்
மறந்தும் மறந்தாலும்
பிறிது அறிய மாட்டா திருமாலை அல்லாமல் வேறு தெய்வத்தை நினைக்காது ;
ஒரு நாவாய் நாவை உடைய என் வாயானது
சிறந்த திரு நாவாய் வாழ்கின்ற மேம்பட்ட திரு நாவாயில் இருக்கும்
தேவனை அல்லால் ஸ்ரீமன் நாராயணனை அல்லாமல் வேறு தெய்வத்தை
வாழ்த்தாது உகந்து விரும்பி துதிக்காது
V.Sridhar