Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 070/116 செங்குன

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 070/116 செங்குன

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 070/116 செங்குன்றூர் மாலே ! வரவேண்டும் !

    திருப்பதி - 64/108. மலை நாடு - 06/13 : திருச் செங்குன்றூர்

    வரவேண்டும் கண்டாய் , மதி கலங்கி விக்குள்
    பொரவே உயிர் மாயும் போழ்து - பரமேட்டி !
    செங்குன்றூர் மாலே ! சிறைப் பறவை மேல் கனகப்-
    பைங்குன்று ஊர் கார் போல் பறந்து

    பதவுரை :

    பரமேட்டி பரம பதத்தில் இருப்பவனே !
    செங்குன்றூர் மாலே திருச் செங்குன்றூரில் இருக்கும் திருமாலே !
    மதி கலங்கி எனது அறிவு ஒடுங்கி ,
    விக்குள் பொரவே விக்கல் துன்பம் செய்து ,
    உயிர் மாயும் போழ்து எனது உயிர் நீங்கும்போது ,
    சிறைப் பறவை மேல் இறகுகளை உடைய கருடன் மேல்
    கனகப்பைங்குன்று ஊர் பசும்பொன் மயமான மலையின் மீது ஏறி வரும்
    கார் போல் கரிய மேகம் போல்
    பறந்து வரவேண்டும் விரைந்து வந்து , காட்சி தந்து அருள வேண்டும்

    V.Sridhar
Working...
X