4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 069/116 திருப்புலியூர் தென்றல் வரின் விதி நீங்கி விடுமே !
திருப்பதி - 63/108. மலை நாடு - 05/13 : திருப்புலியூர்
முதல் வண்ணம் ஆமே முலை வண்ணம் ; முன்னை
விதி வண்ணம் நீங்கி விடுமே - சதுரத்-
திருப்புலியூர் நின்றான் திருத்தண் துழாயின்
மருப்புலி ஊர் தென்றல் வரின்
பதவுரை :
சதுரத் திருப்புலியூர் நின்றான் அழகிய திருப்புலியூரில் நிற்கும் திருமாலின்
திருத்தண் துழாயின் குளிர்ந்த திருத் துழாயின் மாலையின் நறு மணத்தை
மருப்புலி ஊர் தென்றல் வரின் வீசும் தென்றல் காற்று வருமாயின்
முலை வண்ணம் பிரிவால் உண்டான எனது தனங்களின் பசலை நிறம் மாறி
முதல் வண்ணம் ஆமே முந்தைய நிறமே வந்து சேரும்
முன்னை விதி வண்ணம் முற்பிறவியில் செய்த தீவினைகள்
நீங்கி விடுமே முழுதும் அடியோடு போய் விடும்
V.Sridhar