Announcement

Collapse
No announcement yet.

காளமேகத்தின் கணக்கு தமிழில் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காளமேகத்தின் கணக்கு தமிழில் !

    காளமேகத்தின் கணக்கு தமிழில் !

    முக்காலுக்கு ஏகாமுன் முன்னரையில் வீழாமுன்
    அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
    இருமாமுன் மாகாணிக்கேகாமுன் - கச்சி
    ஒரு மாவின் கீழரை இன்று ஓது

    பதவுரை :

    முக்காலுக்கு ஏகா முன் தள்ளாமையால் மூன்றாவது காலாகக் கைத்தடியை நாடு முன் ,
    முன் நரையில் வீழாமுன் தலையில் நரை முடி தோன்றும் முன் ,
    அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் காலனின் கால் நம்மை நாடி வரும் முன் ,
    விக்கி இருமாமுன் விக்கல் , இருமல் இவைகளால் துன்பப் படும் முன்னால் ,
    மாகாணிக்கு ஏகாமுன் இறுதி யாத்திரைக்குச் செல்லா முன்
    கச்சி ஒரு மாவின் கீழரை கச்சியில் மாமரத்தின் கீழ் உள்ள சிவனை
    இன்று ஓது இன்றே வணங்கு !



    அது சரி ! கணக்கு எங்கே ? பாடலை மீண்டும் பாருங்கள் !


    ஒன்றை விட சிறிய பின்னங்கள் ! (இறங்கு வரிசையில்)

    முக்காலுக்கு ஏகாமுன் முன் அரையில் வீழாமுன்
    அக்கால் , அரைக் கால் கண்டு அஞ்சாமுன் - விக்கி
    இருமாமுன் மாகாணிக்கேகாமுன் - கச்சி
    ஒரு மாவின் கீழரை இன்று ஓது


    முக்கால் 3/4
    அரை 1/2
    கால் 1/4
    அரைக்கால் 1/8
    இருமா 1/10
    மாகாணி 1/16
    ஒரு மா 1/20
    கீழரை 1/256

    நன்றி : கல்கி தீபாவளி மலர் 2013


    --
    V.Sridhar

  • #2
    Re: காளமேகத்தின் கணக்கு தமிழில் !

    Dear Mr. Sreedhar,

    Thanks. Very Nice. This shows the talent of our ancestors.

    S. Sankara Narayanan
    RADHE KRISHNA

    Comment

    Working...
    X