4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 065/116 நெஞ்சே ! அனந்தபுரம் சேர்ந்தான் அடி வணங்கு !
திருப்பதி - 59/108. மலை நாடு - 01/13 : திருவனந்தபுரம்
கோள் ஆர் பொறி ஐந்தும் குன்றி , உடலம் பழுத்து
மாளா முன் , நெஞ்சே ! வணங்குதியால் - கேளார்
சினந்த புரம் சுட்டான் , திசை முகத்தான் , போற்றும்
அனந்தபுரம் சேர்ந்தான் அடி
பதவுரை :
நெஞ்சே எனது மனமே !
கோள் ஆர் உன்னை விஷயங்களில் இழுத்துச் செல்லும்
பொறி ஐந்தும் குன்றி ஐம்பொறிகளும் வலிமை குறைந்து
உடலம் பழுத்து உடம்பு முதுமையால் தளர்ச்சி அடைந்து
மாளா முன்இறப்பதற்கு முன்னே
கேளார் சினந்த பகைவர்கள் ஆகிய அசுரர்கள் கோபித்த இடமான
புரம் சுட்டான் திரிபுரங்களை எரித்த சிவனும் ,
திசை முகத்தான் போற்றும் நான்முகனும் வணங்கும்
அனந்தபுரம் சேர்ந்தான் திருவனந்தபுரத்தில் இரூக்கும் திருமாலின்
அடி வணங்குதி யால் திருவடிகளை வணங்குவாயாக !
--
V.Sridhar