Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 064/116 நாளும் வ&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 064/116 நாளும் வ&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 064/116 நாளும் வாழ கோளூர் மருவுங்கோள் !

    திருப்பதி - 58/108. பாண்டிய நாடு - 18/18 : திருக் கோளூர்

    பிறப்பு அற்று , மூப்பு பிணி அற்று , நாளும்
    இறப்பு அற்று , வாழ இருப்பீர் ! புறப் பற்றுத்
    தள்ளுங்கோள் ; ஊர் அரவில் தாமோதரன் பள்ளி
    கொள்ளும் கோளூர் மருவுங்கோள்

    பதவுரை

    பிறப்பு அற்று பிறப்பை ஒழித்து ,
    மூப்பு பிணி அற்று கிழத்தனமும் நோயும் நீங்கி ,
    இறப்பு அற்று மரணத்தைத் தவிர்த்து
    நாளும் வாழ இருப்பீர் ! எந்நாளும் முக்தியில் நிலையாக வாழ விரும்புபவர்களே !
    புறப் பற்றுத் தள்ளுங்கோள் மமகாரத்தை ஒழியுங்கள்
    ஊர் அரவில் மார்பினால் ஊர்ந்து செல்லும் ஆதி சேஷன் மேல்
    தாமோதரன் பள்ளி கொள்ளும் திருமால் கண்வளரும்
    கோளூர் மருவுங்கோள் திருக்கோளூருக்குச் செல்லுங்கள்

    ************************************************************
    பாண்டிய நாட்டுத் திருப்பதிகள் முற்றிற்று
    ************************************************************

    --

    V.Sridhar
    Last edited by sridharv1946; 10-11-13, 20:50.
Working...
X