4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 063/116 குறுங்குடி மாயற்கு ஆள் ஆகப்பிறப்பு மேன்மைத்தே !
திருப்பதி - 57/108. பாண்டிய நாடு - 17/18 : திருக்குறுங்குடி
தாலத்து இழிகுலத்துச் சண்டாளர் ஆனாலும்
மேல் அத்தவத்தோரின் மேன்மைத்தே - கோலக்
குறுங்குடி வாழ் மாயன் குரை கழற்கு ஆள் ஆகப்-
பெறும் குடியாய் வாழ்வார் பிறப்பு
பதவுரை :
கோலக் குறுங்குடி வாழ் மாயன் அழகிய திருக் குறுங்குடியில் வசிக்கும் திருமாலின்
குரை கழற்கு ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளுக்கு
ஆள் ஆகப்பெறும் அடிமையாக உள்ள
குடியாய் வாழ்வார் பிறப்பு சந்ததியில் வாழ்பவர்களுடைய ஜன்மமானது
தாலத்து இழிகுலத்துச் பூமியில் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த
சண்டாளர் ஆனாலும் சண்டாள ஜன்மமே ஆனாலும்
மேல் அத்தவத்தோரின் உயர் குடிப் பிறப்பை உடைய முனிவர்களின்
மேன்மைத்தே பிறவியைக் காட்டிலும் உயர்வானதே
V.Sridhar