4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 062/116 திருக் குளந்தையார் கீதை பாடும் தருக்கு உளம் தைக்கும் !
திருப்பதி - 56/108. பாண்டிய நாடு - 16/18 : திருக்குளந்தை
தனக்கு உடலம் வேறான தன்மை உணரார் ;
மனக்கவலை தீர்ந்து உய்ய மாட்டார் - நினைக்கில் ,
திருக்குளந்தையார் உரைத்த சீர்க் கீதை பாடுந்-
தருக்கு உளம் தையாமல் இருந்தால்.
பதவுரை :
நினைக்கில் ஆராய்ந்து பார்த்தால்
திருக்குளந்தையார் உரைத்த திருக்குளந்தையில் இருக்கும் திருமால் அருளிய
சீர்க் கீதை பாடும் தருக்கு சிறந்த பகவத் கீதை படித்ததனால்உண்டாகும் களிப்பு
உளம் தையாமல் இருந்தால் மனதில் பதியாமல் இருந்தால்
தனக்கு உடலம் வேறான உடம்பும் ஆன்மாவும் வேறுபட்டுள்ள
தன்மை உணரார் நிலையை அறிய மாட்டான் .
மனக்கவலை தீர்ந்து மனக் கவலை மாறி
உய்ய மாட்டார் நற்கதி அடைய மாட்டான்
--
V.Sridhar