4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 061/116 வரகுணமங்கையன் மேல் ஆதர குணம் மங்கைக்கு !
திருப்பதி - 55/108. பாண்டிய நாடு - 15/18 : திரு வர குண மங்கை
காலமும் நோயும் கருதாத அன்னைமீர் !
வேலன் வெறியை விலக்குமின்கள் - மால் ஆம்
வரகுணமங்கையன் தாள் வண் துழாய் மேல் ஆ-
தர குணம் மங்கை தனக்கு
பதவுரை :
காலமும் நோயும் பெண்ணின் பருவத்தையும் , அவளது நோயின் தன்மையையும்
கருதாத அன்னைமீர் ஆராய்ந்து அறியாத தாய் மார்களே !
மங்கை தனக்கு உங்கள் பெண்ணிற்கு
மால் ஆம் திருமால் ஆகிய
வரகுணமங்கையன் வர குண மங்கையில் இருக்கும் எம்பெருமான்
தாள் வண் துழாய் மேல் திருவடிகளில் இருக்கும் வளம் உள்ள திருத்துழாய் மேல்
ஆதர குணம் ஆசை ஆகிய குணம் உள்ளது
வேலன் வெறியை விலக்குமின்கள் வேலன் வெறியாட்டை நீக்குங்கள்
--
V.Sridhar