4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 060/116 கருளப்புள் அச்சுதன் அருள வந்தக்கால் !
திருப்பதி - 54/108. பாண்டிய நாடு - 14/18 : திருப் புளிங்குடி
தெளியும் பசும் பொற் சிறைக் காற்று வீச
விளியும் துயர் போய் விடுமே - எளியேற்கு
அருளப் புளிங்குடி வாழ் அச்சுதனைக் கொண்டு ,
கருளப்புள் இங்கு வந்தக் கால்
பதவுரை :
எளியேற்கு அருள ஏழையேனான எனக்குத் திருவருள் புரிய
புளிங்குடி வாழ் அச்சுதனைக் கொண்டு திருப்புளி எம்பெருமானை ஏந்திக்கொண்டு
கருளப்புள் இங்கு வந்தக் கால் கருடன் இங்கு வந்தால்
தெளியும் பசும் பொன் தெளிந்த பசிய பொன் மயமான
சிறைக் காற்று வீச இறகுகளினின்று காற்று வீசினால்
விளியும் துயர் போய் விடுமே எனது பெரும் துயரம் விலகி விடும்
--
V.Sridhar