4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 058/116 திருப் பேரைப் பதியான் திருப் பேரைப் பதி , நாவில் !
திருப்பதி - 52/108. பாண்டிய நாடு - 12/18 : திருப்பேரை
அரைசு ஆகி வையம் முழுது ஆண்டாலும் , இன்பக்-
கரை சார மாட்டார்கள் கண்டீர் - முரைசு ஆரும்
தென் திருப் பேரைப் பதியான் சீர் கேட்டு , நாவில் அவன்
தன திருப் பேரைப் பதியாதார்
பதவுரை :
முரைசு ஆரும் பேரிகை வாத்தியம் முழங்கும்
தென் திருப் பேரைப் பதியான் தெற்கிலுள்ள திருப்பேரையில் இருக்கும் பெருமானின்
சீர் கேட்டு சிறப்பைக் காதால் கேட்டு ,
அவன் தன திருப் பேரை மகர நெடும் குழைக் காதர் எனும் அவனது பெயரை
நாவில் பதியாதார் தமது நாவில் உச்சரிக்காதவர்கள்
அரைசு ஆகி அரசன் ஆகி
வையம் முழுது ஆண்டாலும் உலகம் முழுவதையும் ஆட்சி செய்தாலும்
இன்பக் கரை சார மாட்டார்கள் பேரின்பம் உள்ள முக்தி உலகை அடைய மாட்டார்கள்
கண்டீர் பாரீர்
--
V.Sridhar