Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 057/116 சீவர மங்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 057/116 சீவர மங்&

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 057/116 சீவர மங்கை அரசே ! அவதியிடல் ஆகாதோ ?

    திருப்பதி - 51/108. பாண்டிய நாடு - 11/18 : ஸ்ரீ வர மங்கை

    வானோர் முதலா மரம் அளவா எப்பிறப்பும்
    ஆனேற்கு அவதியிடல் ஆகாதோ ? - தேன் ஏயும்
    பூ வர மங்கை , புவி மங்கை நாயகனே !
    சீவர மங்கை அரசே

    பதவுரை :

    தேன் ஏயும் பூ வர மங்கை தேன் நிரம்பிய தாமரையில் இருக்கும் திரு மகளுக்கும்
    புவி மங்கை நாயகனே பூமிப் பிராட்டிக்கும் தலைவனே !
    சீவர மங்கை அரசேஸ்ரீ வர மங்கையில் இருக்கும் இறைவனே !
    வானோர் முதலா தேவர் பிறவி முதலாக
    மரம் அளவா தாவரப் பிறவி ஈறாக உள்ள
    எப்பிறப்பும் ஆனேற்கு எல்லா பிறவியையும் எடுத்து வருந்திய எனக்கு
    அவதியிடல் ஆகாதோ ஒரு முடிவு ஏற்படுத்தக் கூடாதா ?








    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 08-11-13, 20:52.
Working...
X