4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 055/116 குருகு ஊர் சடகோபன் ஊர் எங்கள் வண் குருகூர் !
திருப்பதி - 49/108. பாண்டிய நாடு - 09/18 :திருக் குருகூர்
வளம் தழைக்க உண்டால் என் ? வாசம் மணத்தால் என் ?
தெளிந்த கலை கற்றால் என் ? சீசீ - "குளிர்ந்த பொழில்
தண் குருகு ஊர் வாவிச் சடகோபன் ஊர் எங்கள்
வண் குருகூர்" என்னாத வாய் .
பதவுரை :
குளிர்ந்த பொழில் "குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த
குருகு ஊர் குருகு எனும் நீர்ப் பறவைகள் வாழும்
தண் வாவி குளிர்ந்த நீர் நிலைகளை உடைய
சடகோபன் ஊர் நம்மாழ்வார் அவதரித்த ஊர்
எங்கள் வண் குருகூர் வளமை உள்ள எங்கள் ஊர்"
என்னாத வாய் என்று ஒரு தடவை கூட சொல்லாத வாய்
வளம் தழைக்க உண்டால் என் வளமாகப் புசிப்பதால் என்ன பயன் ?
வாசம் மணத்தால் என் வாசப்பொருட்களால் மணம் வீசினால் என்ன பயன் ?
தெளிந்த கலை கற்றால் என் ? சீசீ தெளிவு அடைவதற்கு நூல்களைப் படித்தால் என்ன பயன் ?
V.Sridhar