4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 049/116 திரு மெய்ய மாயா ! கேளாய் !
திருப்பதி - 43/108. பாண்டிய நாடு - 03/18 : திரு மெய்யம்
ஆள் ஆய் உனக்கு , அன்பு ஆய் , ஆசை ஆய் , நாணிலி ஆய்
வாளா மனைவி என்று வாழ்வேனைக் - கேளாய்
திரு மெய்ய மாயா ! - சிலை கால் வளைத்து
வரும் எய்ய மாயா மதன்
பதவுரை :
திரு மெய்ய மாயா திரு மெய்யத்தில் இருக்கும் மாயனே !
உனக்கு ஆள் ஆய் உனக்கு அடிமைப் பட்டு ,
அன்பு ஆய் உன் மீது அன்பு கொண்டு ,
ஆசை ஆய் உன் மேல் ஆசை வைத்து ,
நாணிலி ஆய் வெட்கம் அற்றவளாய் ,
வாளா மனைவி என்று வீணாக மனைவி என்று பெயரளவில்
வாழ்வேனைக் கேளாய் வாழும் என்னைக் கேளாமல் பராமுகமாய் இருந்தாய்
மாயா மதன் சிவன் அழித்தும் ஒழியாத மன்மதன்
சிலை கால் வளைத்து கரும்பு வில்லை வளைத்து
எய்ய வரும் மலர் அம்புகளை எய்து வருத்த வருவான் !