4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 048/116 திருக் கோட்டியூரானே ! என்னை ஆள் !
திருப்பதி - 42/108. பாண்டிய நாடு - 02/18 : திருக் கோட்டியூர்
வான் பார்க்கும் பைங்கூழ் போல் வாளா உனது அருளே
யான் பார்க்க , நீ பார்த்து இரங்கினாய் - தேன் பார்ப்பின்
ஓசைத் திருக் கோட்டியூரானே ! இன்னமும் என்
ஆசைத் திருக்கு ஓட்டி ஆள்
பதவுரை :
தேன் பார்ப்பின் ஓசை இள வண்டுகளுடைய ரீங்கார ஓசை மிகுந்த
திருக் கோட்டியூரானே திருக் கோட்டியூரில் இருக்கும் திருமாலே !
வான் பார்க்கும் வானத்திலிருந்து மழையை எதிர் நோக்கும்
பைங்கூழ் போல் பசுமையான பயிரைப் போல
வாளா உனது அருளே யான் பார்க்க சும்மா உனது அருளையே எதிர் பார்க்க ,
நீ பார்த்து இரங்கினாய் நீ அதனை அளித்து அருள் புரிந்தாய்
இன்னமும் என் இனிமேலும் எனது
ஆசைத் திருக்கு ஓட்டி ஆள் பற்றாகிய மாறுபாட்டை போக்கி என்னை ஆட்கொள் .
V.Sridhar