4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 044/116 காவளம்பாடித் திருமால் தொழுவேன் !
திருப்பதி - 38/108. சோழ நாடு - 38/40 : திருக் காவளம்பாடி
செப்பேன் மனிதருக்கு என் செஞ்சொல் - தமிழ் மாலை ;
கைப்பேன் பிற தெய்வம் காண்பாரை ; எப்போதும்
காவளம்பாடித் திருமால் கால் தாமரை தொழுது
நாவளம் பாடித் திரிவேன் நான்
பதவுரை :
என் செஞ்சொல் தமிழ் மாலை இன் சொற்கள் நிறைந்த தமிழ்ப் பாமாலையை
மனிதருக்கு செப்பேன் மனிதருக்காக ஒரு போதும் பாட மாட்டேன்
பிற தெய்வம் காண்பாரை வேறு தெய்வங்களைத் தரிசிக்கிற
எப்போதும் கைப்பேன் அவைஷ்ணவர்களை வெறுப்பேன்
காவளம்பாடித் திருமால் திருக் காவளம்பாடியில் இருக்கும் திருமாலின்
கால் தாமரை தொழுது திருவடித் தாமரைகளை வணங்கி
நா வளம் பாடி என் நாவினால் வளமாகக் கவி பாடிக் கொண்டு
நான் திரிவேன் நான் மகிழ்ந்து இருப்பேன்
--
V.Sridhar