4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 039/116 சீர்க்கும் திருத்தேவனார் தொகை மால் வணங்கு !
திருப்பதி - 33/108. சோழ நாடு - 33/40 : திருத் தேவனார் தொகை
ஆர்க்கும் வலம்புரியால் , அண்டமும் , எண்திசையும் ,
கார்க்கடலும் , வெற்பும் கலங்கினவால் - சீர்க்கும்
திருத்தேவனார் தொகை மால் செவ்வாய் வைத்து ஊதத்-
தருத்தேவனார் தொகையும் சாய்ந்து
பதவுரை :
சீர்க்கும் திருத்தேவனார் தொகை சிறப்புடைய திருத்தேவனார் தொகையில் இருக்கும்
மால் செவ்வாய் வைத்து ஊத திருமால் பாஞ்ச ஜன்யத்தை தன வாயில் வைத்து ஊத
ஆர்க்கும் வலம்புரியால் ஆரவாரம் செய்யும் அந்த சங்கின் ஒலியால்
தருத்தேவனார் தொகையும் கற்பகத் தருவின் நிழலில் இருக்கும் தேவர்கள் எல்லோரும்
சாய்ந்து மூர்ச்சை அடைந்து கீழே விழ
அண்டமும் , எண்திசையும் அண்டங்களும் , எட்டு திசைகளும்
கார்க்கடலும் , வெற்பும் கரிய கடலும் , மலைகளும்
கலங்கின வால் கலங்கிப் போயின
--
V.Sridhar