4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 035/116 திரு வெள்ளி அங்குடியான் சீர் நுவல்வார் ஆர் ?
திருப்பதி - 29/108. சோழ நாடு - 29/40 : திரு வெள்ளியங்குடி
கால் அளவும் போதாக் கடல் ஞாலத்தோர் கற்ற
நூல் அளவே அன்றி நுவல்வார் ஆர் - கோலப்
பரு வெள்ளி அம் குடியான் பாதக ஊண் மாய்த்த
திரு வெள்ளி அங்குடியான் சீர்
பதவுரை :
கோலப் பரு வெள்ளி அம் குடியான் அழகிய பெரிய வெள்ளி மலை வாழும் சிவனது
பாதக ஊண் மாய்த்த பாவத்தால் யாசித்து உண்பதை ஒழித்த
திரு வெள்ளி அங்குடியான் சீர் திரு வெள்ளியங்குடியில் வாழும் பெருமான் சிறப்பை
கால் அளவும் போதாக் திரிவிக்கிரம அவதாரத்தில் காலை விட சிறிய
கடல் ஞாலத்தோர் கற்ற கடல் சூழ்ந்த பூமியில் உள்ளவர்கள் படித்தறிந்த
நூல் அளவே அன்றி நூல்களின் அளவாகக் கூறுவதே அல்லாமல்
நுவல்வார் ஆர் முழுவதும் சொல்லக் கூடியவர் யார் ?
--
V.Sridhar