Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 034/116 கவித் தல&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 034/116 கவித் தல&#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 034/116 கவித் தலத்தில் கண் துயில்வோன் காலே எல்லாம் !

    திருப்பதி - 28/108. சோழ நாடு - 28/40 : திருக் கவித்தலம்

    காணியும் , இல்லமும் , கைப்பொருளும் , ஈனறோரும் ,
    பேணிய வாழ்க்கையும் , பேர் உறவும் , சேணில்
    புவித் தலத்தில் இன்பமும் - பொங்கு அரவம் ஏறிக்-
    கவித் தலத்தில் கண் துயில்வோன் கால்

    பதவுரை :

    காணியும் , இல்லமும் அடியேனுக்கு பூமியும் , வீடும்
    கைப்பொருளும் , ஈன்றோரும் கையில் உள்ள பொருட்களும், பெற்றவர்களும்
    பேணிய வாழ்க்கையும் , பேர் உறவும் விரும்பிய நல வாழ்வும் , சுற்றத்தாரும்
    சேணில் புவித் தலத்தில் இன்பமும் இம்மையிலும் மறுமையிலும் சுகமும்
    கவித் தலத்தில் கவித்தலம் எனும் இடத்தில்
    பொங்கு அரவம் ஏறிக்- சீறும் ஆதி சேஷன் மேல் ஏறி
    கண் துயில்வோன் கால் பள்ளி கொண்ட திருமாலின் திருவடிகளே

    --
    V.Sridhar
Working...
X