4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 029/116 கோவிந்தன் சித்திர கூடம் கருதிச் செல் !
திருப்பதி - 23/108. சோழ நாடு - 23/40 : திருச் சித்திர கூடம்
அடியால் உலகு எல்லாம் அன்று அளந்து கொண்ட
நெடியானைக் கூடுதியேல் , நெஞ்சே ! கொடிது ஆய
குத்திரக் கூடு அங்கி கொளுந்தா முன் , கோவிந்தன்
சித்திர கூடம் கருதிச் செல்
பதவுரை :
நெஞ்சே ! என் மனமே !
அடியால் உலகு எல்லாம் தனது திருவடிகளால் எல்லா உலகங்களையும்
அன்று அளந்து கொண்ட முற்காலத்தில் அளந்து பெற்றுக்கொண்ட
நெடியானைக் கூடுதியேல் திரிவிக்கிரமனை அடைய விரும்பினால்
கொடிது ஆய குத்திரக் கூடு கொடுமையான இழி குணத்தை உடைய இவ்வுடலை
அங்கி கொளுந்தா முன்நெருப்பு எரித்து விடுவதற்கு முன்னமே
கோவிந்தன் சித்திர கூடம் கோவிந்தராஜன் இருக்கும் சித்திர கூடத்தை
கருதிச் செல் நினைத்து செல்வாயாக !
--
V.Sridhar