4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 028/116 இந்தளத்து அகில் வாசம் எழும் இந்தளூரான் அடி சூடுவோம் !
திருப்பதி - 22/108. சோழ நாடு - 22/40 : திரு இந்தளூர்
நாடுதும் வா நெஞ்சமே ! நாராயணன் பதிகள்
கூடுதும் வா , மெய்யடியார் கூட்டங்கள் ; சூடுதும் வா ,
வீதி இந்தளத்து அகிலின் வீசு புகை வாசம் எழும்
ஆதி இந்தளூரான் அடி
பதவுரை :
நெஞ்சமே என் மனமே !
நாராயணன் பதிகள் திருமாலின் திருப்பதிகளை
நாடுதும் வா சென்று தரிசிப்போம் வா !
மெய்யடியார் கூட்டங்கள் உண்மையான பக்தர்களது கூட்டங்களை
கூடுதும் வா போய்ச் சேருவோம் வா !
இந்தளத்து அகிலின் தூபக் கால்களில் உள்ள அகில் கட்டைகளின்
வீசு புகை வாசம் எழும் வீதி புகையின் நறுமணம் வீசும் தெருக்கள் உள்ள
ஆதி இந்தளூரான் பழமையான திரு இந்தளூரில் இருக்கும் பெருமானின்
அடி சூடுதும் வா திருவடிகளை தலையில் சூட்டிக்கொள்வோம் வா !
--
V.Sridhar