4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 027/116 திருச்செங்கண் மால் நந்தி புர விண்ணகரம் நாடு !
திருப்பதி - 21/108. சோழ நாடு - 21/40 : திரு நந்திபுர விண்ணகரம்
செயற்குஅரிய செய்வோமைச் செய்யாமை - நெஞ்சே !
மயக்குவார் ஐவர் வலியால் ; "நயக்கலவி
சிந்தி ; புர விண்ணகரம்" என்பர் : திருச்செங்கண் மால்
நந்தி புரவிண்ணகரம் நாடு
பதவுரை :
நெஞ்சே ! என் மனமே !
செயற்குஅரிய செய்வோமை செய்ய முடியாத செயல்களை செய்யக் கூடிய நம்மை
வலியால் மயக்குவார் செய்ய விடாமல் தமது வலிமையால் மயங்கச் செய்யும்
ஐவர் நமது ஐந்து பொறிகள்
"நயக்கலவி சிந்தி "இனிமையான சிற்றின்பத்தையே நினைப்பாய்
புரவிண்ணகரம்" என்பர் சுவர்க்கத்தை அரசாட்சி செய்வாய் " என்று கூறும் .
திருச்செங்கண் மால் சிவந்த திருக் கண்கள் உடைய திருமாலின்
நந்தி புரவிண்ணகரம் நாடு நந்தி புரவிண்ணகரத்தை விரும்புவாயாக !
V.Sridhar