4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 025/116 தென் நாகையாய் ! அருளிச் செய் !
திருப்பதி - 19/108. சோழ நாடு - 19/40 : திரு நாகை
சேர்ந்து உனக்குக் குற்றேவல் செய்திலன் ; என் சிந்தையில் நீ
ஆர்ந்ததற்கு ஓர் கைம்மாறு அறிகிலேன் - பூந்துவரை
மன்னா ! கை ஆழி வலவா ! வலம்புரியாய் !
தென் நாகையாய் ! அருளிச் செய்
பதவுரை :
பூந்துவரை மன்னா அழகிய துவாரகைக்கு அரசனே !
கை ஆழி வலவா வலக்கையில் சுதர்சன சக்கரத்தை உடையவனே !
வலம்புரியாய் ! இடக்கையில் பாஞ்ச ஜன்யம் எனும் வலம்புரி சங்கை உடையவனே !
தென் நாகையாய் ! அழகிய நாகையில் இருப்பவனே !
சேர்ந்து உனக்கு அடியேன் உன்னை சரண் அடைந்து
குற்றேவல் செய்திலன் உனக்கு சிறிய கைங்கர்யத்தையும் செய்யவில்லை
என் சிந்தையில் அடியேன் மனத்தில்
நீ ஆர்ந்ததற்கு நீ நன்கு எழுந்தருளி இருப்பதற்கு
ஓர் கைம்மாறு அறிகிலேன் ஒரு பிரதி உதவியும் அறிய வில்லை !
அருளிச் செய் கூறி அருள்வாயாக !
--
V.Sridhar