4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 022/116 திருவிண்ணகராளா ! பெருவிண்ணகர் எண்ணேன் !
திருப்பதி - 16/108. சோழ நாடு - 16/40 : திருவிண்ணகர்
கையும் உரையும் கருத்தும் உனக்கே அடிமை
செய்யும்படி நீ திருத்தினாய் - ஐயா !
திருவிண்ணகராளா - சிந்தையிலும் எண்ணேன் ,
பெருவிண்ணகர் ஆறும் பேறு
பதவுரை :
ஐயா திருவிண்ணகராளா தலைவனே ! திருவிண்ணகரை ஆள்பவனே !
கையும் உரையும் கருத்தும்எனது கைகளும் , வாக்கும் , எண்ணமும்
உனக்கே அடிமை செய்யும்படிஉனக்கே அடிமை செய்யும்படி
நீ திருத்தினாய் என்னை நல் வழியில் போகச் செய்தாய் !
பெருவிண்ணகர் ஆறும் பேறு பெருமை உள்ள இந்திர லோகத்தை ஆளும் சுகத்தை
சிந்தையிலும் எண்ணேன் மனதாலும் இனி நான் நினைக்க மாட்டேன் !
V.Sridhar