4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 020/116 உலகைப் படைத்து , பாதுகாத்து , அழித்தவன் நீயே !
திருப்பதி - 14/108. சோழ நாடு - 14/40 : திருக் குடந்தை
தானே படைத்து , உலகைத் தானே அளித்து , நீ
தானே அழிக்கும் தளர்ச்சியோ ? - வானில்
திரு மகுடம் தைக்கச் சிறு குறளாய் நீண்ட
பெரும ! குடந்தைக் கிடந்தாய் பேசு
சிறு குறளாய் சிறிய வாமன அவதாரம் ஆகி ,
வானில் திரு மகுடம் தைக்க பிறகு வானத்தில் திரு மகுடம் முட்டும்படி
நீண்ட பெரும நீண்டு வளர்ந்து அருளிய பெருமானே !
நீ தானே படைத்து பிரமன் ஆகி நீயே உலகத்தைப் படைத்து ,
தானே உலகை அளித்து நீ விஷ்ணு ஆகி உலகைப் பாதுகாத்து
தானே அழிக்கும் நீ சிவன் ஆகி உலகை அழித்ததனால்
தளர்ச்சியோ ஏற்பட்ட இளைப்பினால்
குடந்தைக் கிடந்தாய் குடந்தையில் பள்ளி கொண்டாயோ ?
பேசு கூறுவாயாக !
--
V.Sridhar