4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 018/116 பேறு ஆகச் சேறைக்கு நாயகன் பேர் செப்பு !
திருப்பதி - 12/108. சோழ நாடு - 12/40 : திருச்சேறை
சென்று சென்று செல்வம் செருக்குவார் வாயில் தொறும்
நின்று நின்று தூங்கும் மட நெஞ்சமே ! இன் தமிழைக்-
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே , பேறு ஆகச்-
சேறைக்கு நாயகன் பேர் செப்பு
பதவுரை :
செல்வம் செருக்குவார் செல்வத்தினால் கர்வம் அடைந்தவர்களை
வாயில் தொறும் சென்று சென்று வீட்டு வாசல் தோறும் போய்ப் போய்
நின்று நின்று அங்கே நெடு நேரம் நின்று
தூங்கும் மட நெஞ்சமே சோர்ந்து போகும் அறியாமை உடைய என் மனமே !
இன் தமிழை இனிய தமிழ்ப் பாடல்களை
கூறைக்கும் சோற்றுக்கும் கூறாதே துணிக்காகவும் , உணவுக்காகவும் மனிதனைப் பாடாமல்
பேறு ஆக முக்தி கிடைக்கும்படி \
சேறைக்கு நாயகன் பேர் செப்பு திருச்சேறை நாதனைப் பாடுவாயாக !
--
V.Sridhar