4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 016/116 செழும் தூரத்தன் எனினும் அழுந்தூர் அத்தன் அணியன்
திருப்பதி - 10/108. சோழ நாடு - 10/40 : திரு அழுந்தூர்
அடியாராய் வாழ்மின் - அறிவு இலாப் பேய்காள் !
செடி ஆர் வினை அனைத்தும் தீரும் ; முடிவில்
செழுந்தூரத்தன் எனினும் , செங்கண் மால் எங்கள்
அழுந்தூர் அத்தன் , அணியன் ஆம்
பதவுரை :
அறிவு இலாப் பேய்காள் புத்தி இல்லாததால் பேய் போன்றவர்களே !
அடியாராய் வாழ்மின் எம்பெருமானுக்குத் தொண்டர்களாய் வாழ்வீர்
செடி ஆர் வினை அனைத்தும் தீரும் செடி போல் அடர்ந்த தீவினைகள் ஒழியும்
செங்கண் மால் சிவந்த கண்களை உடைய திருமாலும்
எங்கள் அழுந்தூர் அத்தன் திருவழுந்தூரில் இருக்கும் எங்கள் ஸ்வாமி
செழும் தூரத்தன் எனினும் தொலைவில் இருப்பவன் போல் தோன்றினாலும்
முடிவில் அணியன் ஆம் அந்திம காலத்தில் அருகே வந்து அருள்வான்
--
V.Sridhar