Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 013/116 புள்ளம் &#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 013/116 புள்ளம் &#

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 013/116 புள்ளம் பூதங்குடி போனால் வினை தீரும் !

    திருப்பதி - 7/108. சோழ நாடு - 7/40 : திருப் புள்ளம் பூதங்குடி

    விரும்பினவை எய்தும் ; வினை அனைத்தும் தீரும் ;
    அரும் பரம வீடு அடைவீர் - பெரும் பொறிகொள்
    கள்ளம் பூதம் குடி கொள் காயமுடையீர் ! அடிகள்
    புள்ளம் பூதங்குடியில் போம்

    பதவுரை :

    பெரும் பொறிகொள் வலிய ஐம் பொறிகளைக் கொண்டதும்
    கள்ளம் பூதம் குடி கொள் வஞ்சனையும் பஞ்ச பூதங்களையும் உடையதும் ஆன்
    காயம் உடையீர் ! சரீரத்தை உடையவர்களே !
    அடிகள் புள்ளம் பூதங்குடியில் போம் எம்பெருமான் இருக்கும் புள்ளம் பூதங்குடிக்கு போங்கள்
    விரும்பினவை எய்தும் விரும்பியவை எல்லாம் கை கூடும்
    வினை அனைத்தும் தீரும் தீய வினைகள் எல்லாம் ஒழியும்
    அரும் பரம வீடு அடைவீர் அரிய ஸ்ரீ வைகுண்டத்தையும் சேர்வீர்கள்

    V.Sridhar

    Last edited by sridharv1946; 24-10-13, 21:34.
Working...
X