4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 012/116 மறை அறை வெள்ளறையான் தாளே விரும்பு
திருப்பதி - 6/108. சோழ நாடு - 6/40 : திரு வெள்ளறை
கல் இருந்தான் தந்தை கமலத்தோன் , அக் கமலத்-
தில் இருந்தான் தந்தை அரங்கேசன் என்றே தொல்லை மறை
உள் அறையா நின்றமையால் , உள்ளமே ! கள்ளம் இன்றி
வெள்ளறையான் தாளே விரும்பு
பதவுரை : அறை - சொல்லும் / பாறை
உள்ளமே ! எனது மனமே !
கல் இருந்தான் தந்தை "கயிலை மலையில் இருக்கும் சிவனுடைய தந்தை
கமலத்தோன்திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரமன் ஆவான்
அக் கமலத்தில் இருந்தான் தந்தை அந்த பிரமனின் தந்தை
அரங்கேசன் என்றே திருவரங்க நாதன் ஆவான்" என்றே
தொல்லை மறை பழமையான வேதங்கள்
உள் அறையா நின்றமையால் சொல்வதால்
கள்ளம் இன்றி கபடம் இல்லாமல்
வெள்ளறையான் திரு வெள்ளறயில் இருக்கும் பெருமானது
தாளேவிரும்பு திருவடிகளை விரும்பிச் சேருவாயாக
V.Sridhar