Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 011/116 நெஞ்சே ! க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 011/116 நெஞ்சே ! க

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 011/116 நெஞ்சே ! கரம்பனூர் உத்தமன்பேர் கல் !

    5/108. சோழ நாட்டுத் திருப்பதி - 5/40


    சில மா தவம் செய்தும் , தீ வேள்வி வேட்டும் ,
    பல மா நதியில் படிந்தும் , உலகில்
    பரம்ப நூல் கற்றும் , பயன் இல்லை - நெஞ்சே !
    கரம்பனூர் உத்தமன் பேர் கல்



    நெஞ்சே ! உலகில்
    எனது மனமே ! இந்த உலகில்

    சில மா தவம் செய்தும் சில பெரும் தவங்களைச் செய்தும்
    தீ வேள்வி வேட்டும் அக்னி உடைய யாகத்தை செய்தும்
    பல மா நதியில் படிந்தும் பல சிறந்த நதிகளில் மூழ்கியும்
    பரம்ப நூல் கற்றும் விரிவாக நூல்களைப் படித்தும்
    பயன் இல்லை எந்த பயனும் உண்டாகாது
    கரம்பனூர் கரம்பனூரில் இருக்கும்
    உத்தமன் பேர் கல் புருஷோத்தமன் திரு நாமத்தைக் கூறுவாயாக


    V.Sridhar

    Last edited by sridharv1946; 24-10-13, 13:39.
Working...
X