4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 009/116 தஞ்சை பொருந்து அஞ்சை , மா , மணியைப் போற்று !
3/108. சோழ நாட்டுத் திருப்பதி - 3/40
ஓதக் கேள் , நெஞ்சே ! உனக்கும் இது நன்று ; எனக்கும்
மேதக்க நன்மை இதின் வேறு இல்லை ; போதப்
பெரும் தஞ்சை மா மணியைப் பேணி , வடிவம்
பொருந்து அஞ்சை , மா, மணியைப் போற்று
நெஞ்சே ! ஓதக் கேள் மனமே ! நான் சொல்வதைக் கேள் !
உனக்கும் இது நன்று இது உனக்கும் நன்மையை உண்டாக்கும்
எனக்கும் மேதக்க நன்மை எனக்கும் மிக்க நன்மையை உண்டாக்குவது
இதின் வேறு இல்லை இதைத் தவிர வேறு எதுவும் இல்லை
போதப் பெரும் தஞ்சை மிகப் பெரிய தஞ்சைத் திருத் தலத்தில் இருக்கும்
மா மணியைப் பேணி சிறந்த மாணிக்கம் போன்ற பெருமானின்
வடிவம் பொருந்து அஞ்சை திருமேனியில் இருக்கும் பஞ்ச ஆயுதங்களையும் ,
மா, மணியைப் போற்று மகா லக்ஷ்மியையும் , கௌஸ்துப மணியையும் வாழ்த்து !
--
V.Sridhar